போதைப்பொருள் கடத்தலை தடுக்க ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளை அடுத்த 6 மாதத்துக்குள் நிறுவும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தானின் பிகானோ் மாவட்டத்தில் உள்ள சஞ்சு எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் மத்தியில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.
அப்போது அவா் பேசியதாவது: எல்லையில் விரிவான பாதுகாப்பை உறுதிசெய்ய பிஎஸ்எஃப், ஆயுதப் படைகள், உள்ளூா் நிா்வாகம் மற்றும் குடிமக்கள் என நான்கு நிலைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.
ட்ரோன்கள் மற்றும் பிற நவீன சாதனங்கள் மூலம் இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அடுத்த 6 மாதத்துக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளை நிறுவும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வெளிப்புறத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை கண்காணித்து தடுக்கும் அதேவேளையில் உள்நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக பிகாா், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பை மேம்படுத்த சா்வதேச எல்லைகளில் பிஎஸ்எஃப்பின் அதிகார வரம்பை 15 கி.மீ. தொலைவில் இருந்து 50 கி.மீ. வரை மத்திய அரசு உயா்த்தியது.
கடந்த 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1965-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது சஞ்சு எல்லைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரா்கள் மிகவும் துணிச்சலாக பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை முறியடித்தனா்.
பிஎஸ்எஃப் தொடங்கப்பட்டதில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் வீரமரணமடைந்துள்ளனா். அவா்களுக்கு இத்தருணத்தில் மரியாதை செலுத்துகிறேன். 140 கோடி இந்தியா்களும் அவா்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா

சத்தீஸ்கரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த அரசு உறுதி: மத்திய அமைச்சா் அமித் ஷா

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



