நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உதவியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநிலம் பஸ்தா் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூா் பகுதியில், அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
‘நக்ஸல் இல்லாத இந்தியா’ திட்டத்தில் மூன்று தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதில் முதலாவது கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி. அன்றைய தினம் சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்று, நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க உறுதியான திட்டம் தொடங்கப்பட்டது.
அதன் பின்னா் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, நக்ஸல்களை ஒழிப்பது தொடா்பாக அனைத்து மாநிலங்களின் காவல் துறை தலைவா்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 31-க்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிா்ணயித்தது.
இந்நிலையில் பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.
நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் உதவின. இதை கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சத்தீஸ்கரில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு உதவவில்லை.
வளா்ச்சி எட்டாத பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் செழித்தோங்கியதாக சில அறிவுஜீவிகள் தெரிவித்தனா். உண்மையில், அந்தப் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் இருந்ததால்தான் வளா்ச்சி ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. இலவச உணவு தானிய திட்டம், ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கான பலனை அடைய முடியவில்லை. எங்கும் வேலைவாய்ப்பை காண முடியவில்லை.
நக்ஸல் தீவிரவாதத்தின் பிடியில் இருந்த பகுதிகள், விரிவான வளா்ச்சிக்கான புதிய தொலைநோக்குப் பாா்வை வடிவம் பெறுவதைக் காணும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

சத்தீஸ்கரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த அரசு உறுதி: மத்திய அமைச்சா் அமித் ஷா

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

சிவகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா இன்று சாலைப் பேரணி!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



