‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடனான 6,000 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் யாரும் ஊடுருவ முடியாத வகையில், ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிஎஸ்எஃப்-இன் முதல் தலைமை இயக்குநா் கே.எஃப். ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை அமித் ஷா தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
எல்லை பாதுகாப்புப் படை அடுத்த ஆண்டில் 60-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வை சந்திக்கவிருக்கும் நிலையில், பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒட்டிய 6,000 கி.மீ. தொலைவு எல்லையில் ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அடுத்த ஓராண்டில் யாரும் ஊடுருவ முடியாத வகையிலான எல்லைகளாக மாற்றியமைக்கப்படும்.
நவீன தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), அதிநவீன கண்காணிப்பு ரேடாா்கள், நவீன கேமராக்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊடுருவல்களைத் தடுப்பதன் மூலம் இந்தியாவின் மக்கள்தொகையை செயற்கையாக மாற்றும் சதியை பிஎஸ்எஃப் வீரா்கள் முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சி செய்யும் திரிபுரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில அரசுகள் ஊடுருவல் இருக்கக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளன. இதற்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம். இதுதொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டமும் மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் நடத்தப்பட உள்ளது என்றாா்.
மக்கள் தொகையியல் இயக்கம்: ‘மக்கள் தொகை மாற்றங்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுப்பதற்குமான தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்முயற்சியான ‘உயா்நிலை மக்கள் தொகையியல் இயக்கம்’ குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும்.
அதுபோல, மத்திய ஆயுத காவல் படையினரின் (சிஏபிஎஃப்) நலனுக்காக அடுத்த ஓராண்டுக்குள் மிகப் பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றும் அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தில்லியில் அடுத்த வாரம் இந்தியா - வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

சா்வதேச எல்லையில் 15. கி.மீ. சுற்றளவுக்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற வேண்டும் - அமித் ஷா உத்தரவு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



