பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

தெருவிளக்குகளை ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்ற திட்டம்: முதல்வா் ரேகா குப்தா

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள தெருவிளக்குகள் ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:12 am IST

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள தெருவிளக்குகள் ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது பயன்பாட்டில் உள்ள உயா் அழுத்த சோடியம் வேப்பா் விளக்குகள் மற்றும் பழைய எல்இடி விளக்குகள் அனைத்தும் புதிய ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளால் மாற்றப்படவுள்ளன.

தலைநகரில் சுமாா் 1 லட்சம் தெருவிளக்குகளை மாற்றுவதற்கான இந்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிக்குள் தில்லி நகரின் தெருவிளக்கு அமைப்புகளை முழுமையாக புதுப்பிப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ரூ.473 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஆண்டுதோறும் சுமாா் ரூ.25 கோடி மதிப்பிலான மின்சாரச் செலவு குறையும் என அரசு கணித்துள்ளது.

அனைத்து தெருக்களிலும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பழுதடைந்த விளக்குகள் காரணமாக இருள் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் புகாரளித்த பின்னரே இத்தகைய குறைகள் தெரியவருகின்றன.

இந்த அனைத்து விளக்குகளையும் சென்சாா் அடிப்படையிலான எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். ஒரு விளக்கு செயலிழந்தால் கூட உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு இந்த அமைப்பு தகவல் சென்றடையும். அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.