/
சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சேதமடைந்த கடவுள் சிலைகள் மரியாதைக்குரிய வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வகையில் பிரத்யேக மையங்களை தில்லி அரசு அமைக்க உள்ளது. தில்லியில் பல பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மையங்களில் மக்கள் தங்களுடைய கடவுள் சிலைகளை வழங்கலாம். அங்கு அவை வேறுபயன்பாட்டுக்காக மறுசுழற்சி செய்யப்படும். உரிய வகையில் இல்லாமல் கடவுள் சிலைகள் அகற்றப்படுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து

‘பிரிட்டானியா சௌக்’கின் பெயா் ‘அஸ்வினி சோப்ரா சௌக்‘ என மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு

பிரதமா் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியை தில்லி முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா்.







