எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 29) ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,600 குறைந்ததுஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

News image

மழை (கோப்புப்படம்) - DIN

Updated On :9 ஜூன் 2025, 10:52 am

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(ஜூன் 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.