PMK ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்)ENS

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
Published on

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலை இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

சென்னை வந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும்" என்றார்.

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று அமித் ஷா கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அதில் என்ன சந்தேகம், கண்டிப்பாக வரும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்' என்று பதிலளித்தார்.

இதனால் திமுகவில் பாமக கூட்டணி இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com