அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு ஏன்? - மா. சுப்பிரமணியன் விளக்கம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண சிகிச்சைப் பிரிவு குறித்து...
அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்.கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அனைத்துப் பிரிவினருக்கும் மருத்துவ வசதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.

பொதுவார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு, அவர்களின் தனியுரிமை வசதிக்காக கட்டணம் பெறப்பட்டு அறை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 29,771 மருத்துவப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்ஸி, எம்ஆர்பி, என்எச்எம் மற்றும் மாவட்ட மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

43,155 மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த 2026ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்தே 2,642 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை இப்போது மருத்துவர்கள் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கின்றனர்.

பணி நியமன ஆணைகளைப் பெற்றும் 3 மாதங்களுக்குள் பணியில் சேராதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வராதபட்சத்தில் எம்ஆர்பி தேர்வில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் வந்தோருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும்.

கரோனாவைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட 19 மாதிரிகளின் படி வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை.

இணை நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர், கருவுற்ற பெண்கள், முதியோர் மட்டும் முகக்கவசம் அணியலாம். கட்டாயமல்ல.

இதுவரை நாடு முழுவதுமே கரோனா தொற்றால் இறப்பு இல்லை. பல மடங்கு வேகமாகப் பரவும் கேரளத்திலும் கரோனா இறப்புகள் இல்லை.

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் அதிகரிப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையால் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்றார் மா. சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com