ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழ்நாடு ஸ்டைல்! இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு அரசின் புதிய வசதிகள்

News image

சென்னையில் காத்திருப்பு அறை

Updated On :11 ஜூன் 2025, 4:57 pm

DIN

இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுகிறோம். இதுவே, தமிழ்நாடு ஸ்டைல்! என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூரியிருப்பதாவது: ’உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குக் கழிப்பறை, ஏசி, சார்ஜிங் வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்கேண்டிநேவியன் வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல்!

வெய்யிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல்!’ என்று குறிப்பிட்டு தமது எக்ஸ் தளத்தில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.