திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் சாதனை குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவு..

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 11:53 am IST

ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 29% உயர்ந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 7997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது" என்று கூறியுள்ளது.

தொடர்ந்து இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி!

குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்!

2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%!

இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Tamilnadu is first place in textile export: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.