சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
/

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!

தமிழ்நாடு முதல்வர் விஜய்யை மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...

News image

முதல்வர் ஜோசப் சி. விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 2:36 pm IST

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் சி. விஜய்யை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைபடி, இருக்கையில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது செய்யறிவு புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களும் வெள்ளை துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இணையத்தில் பதிலடி கொடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட விடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் திமுக ஊடகப் பிரிவு, “சகோதரரின் மாஃபியா ரீல்ஸ் தொழிற்சாலை முழுவதும் அம்பலமாகிவிட்டது. துண்டு சாகசம் முதல் ஏஐ மதிய உணவுப் புகைப்படம் வரை, தவெகவினரின் போலிச் செய்திப் பிரசாரங்கள் அனைத்துத் திசைகளிலிருந்தும் தோலுரிக்கப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளனர்.

இதனை மறுபதிவிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

"You cannot deceive everyone, all the time!" — Stalin criticizes Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.