
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றாத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையில் கட்டிய வீட்டை காலி செய்யக் கோரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தவை எதிர்த்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிக்க.. இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.