இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்!!

வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்.. இதுபற்றி அறிய வேண்டிய 10 அம்சங்கள்
photo from social media
போர்டபிள் சார்ஜர்portable charger
Published on
Updated on
2 min read

இதுவரை வந்திருக்கும் எத்தனையோ சார்ஜர்களை விட இந்த போர்டபிள் சார்ஜர் பலருக்கும் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. காரணம்.. பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதுதான்.

சார்ஜர் சந்தையில் இந்த போர்டபிள் சார்ஜர் நிச்சயம் ஒரு புதிய வரவாக அமைந்திருக்கும். ஸ்நேப்-என்-சார்ஜர் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு வசதியாக இருக்கிறது.

சந்தைக்கு வந்து விற்பனையில் சாதனை படைத்து வரும் இது, பவர் பேங்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிடும்.

வேறெதுவும் தேவையில்லை..

இந்த ஸ்நேப்-என்-சார்ஜரை செல்போனில் அப்படியே இணைத்துவிடலாம். பிறகென்ன சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

சார்ஜர் போட்டிருக்கும்போது போனில் பேச முடியாது, அதன் ஒயர் பிரச்னையாக இருக்கும். இனி அந்தப் பிரச்னை இருக்காது.

வேகம்.. அதுதானே முக்கியம்

சார்ஜர் மின்னல் வேகத்தில் உங்கள் செல்போனை சார்ஜ் செய்துவிடும். இதைவிட வேறென்ன முக்கியம்.

பேட்டரி பவர்

ஸ்நேப்-என்-சார்ஜரை முழுமையாக சார்ஜ் செய்துகொண்டீர்கள் என்றால், செல்போன், இ-சிகரெட், ஸ்பீக்கர் என எல்லாவற்றையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். கவலையே வேண்டாம்.

இடவசதி

வழக்கமான சார்ஜர்களைக் காட்டிலும் இது மிகவும் சிறியதாக இருப்பதால், அதனை எப்போதும் உங்களுடன் மிக எளிதாகவே வைத்துக் கொள்ளலாம். பவர் பேங்க் போல கனக்காது. அதற்கான ஒயரைத் தேடி அலைய வேண்டாம்.

எளிதாக சார்ஜ் போடலாம்

செல்போன், பவர் பேங்க் போல சார்ஜ் போட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. மிக விரைவாக இந்த போர்டபிள் சார்ஜரை சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் என்பதாலும், செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிவிடும் என்பதாலும்.. இது வரப்பிரசாதம்தான்.

ஒயர்களிலிருந்து விடுதலை..

போனுக்கு சார்ஜ் போட எந்த ஒயரையும் தேடி அலைய வேண்டாம். உங்கள் கைபை அல்லது பர்ஸ் ஒயர்களால் சிக்கி சின்னாபின்னமாகாது. ஒவ்வொரு செல்போனுக்கும் ஏற்ற சார்ஜ் ஒயர்களை வைத்திருக்க வேண்டியதும் இல்லை. எந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் போட்டுக் கொள்ளும் வசதி உள்ளது.

என்னவேணுமோ.. அது இருக்கும்

உங்கள் செல்போன் சி சார்ஜரா, இல்லை மைக்ரோ யுஎஸ்பி சார்ஜரா அல்லது ஆப்பிள் ஃபோனா.. எல்லாவற்றையும் இதில் இணைக்கலாம். எந்தக் கவலையும் வேண்டாம்.

எப்படி இருக்கும்?

ஏதோ வாங்கினோம், ஒரு சில முறை பயன்படுத்தினோம், தூக்கி எறிந்தோம் என்பது போல அல்லாமல், மிகவும் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. போனுடன் மிகவும் எளிதாக அட்டாச் ஆகிறது. நீண்ட காலம் வரும். 2 ஆண்டுகளுக்கு வாரண்டியும் உள்ளது.

சார்ஜ் அளவிடுவதிலும் தனித்துவம்

எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதை மிக அழகாக எல்இடி டிஸ்ப்ளே மூலம் தெரிந்து கொள்ளலாம். எந்த நேரத்திலும் கைவிடாது.

சார்ஜர் இல்லாமல் உங்கள் போன் கூட கைவிடலாம். ஆனால், சார்ஜ் இல்லை என்று இந்த போர்டபிள் சார்ஜர் கைவிடாது என்கிறார்கள் பயன்படுத்தியவர்கள். இதில் கூடுதல் அம்சமே.. சார்ஜர் போட்டுக்கொண்டே போட்டோ எடுத்துக் கொள்ளலாம். மேப் பாக்கலாம்.

கடைசியாக...

இந்த 2025ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பரிசுப் பொருள்களில் இந்த போர்டபிள் சார்ஜர்தான் முதலிடம் பிடிக்கும் என்று பரிசாகக் கொடுத்தவர்களும் பரிசாக இதனைப் பெற்றவர்களும் கூறியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com