திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம்
Updated On :13 ஜூன் 2025, 8:47 pm

Din

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் இருக்கின்றன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோன்று, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்த நிலையில், பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு ட்ற்ற்ல்ள்:ஹக்ம்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கியது. வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை அதற்கான அவகாசம் உள்ள நிலையில், இதுவரை பிவிஎஸ்சி ஏஹெச் படிப்புக்கு 16,339 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 3,978 பேரும் என மொத்தம் 20,317 போ் விண்ணப்பித்துள்ளனா். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோ் மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.