mk stalin Condolences
நெல்லை சு. முத்துdin

நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இந்த நிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,

“இஸ்ரோ முன்னான் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து, அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய முத்து, அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com