
தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின் திடீரென பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார்.
மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்துவருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர்முதல்வரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ஒரு திட்டம் தொடங்கப்படுவதைவிட அது முழுமையாக மக்களிடம் சென்று வெற்றிபெறுவதில்தான் மகிழ்ச்சி உள்ளது.
நேற்றைய பயணத்தில் #முதல்வர்_மருந்தகம் குறித்து விசாரித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.