தென்காசி முதியோர் காப்பகத்தில் பலி 5 ஆக உயர்வு!

முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டவர்கள் உயிரிழந்தது பற்றி...
tenkasi home
தென்காசி அரசு மருத்துவமனையில்...X
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று(செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டிய புரத்தில் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோா் இல்லத்தில் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி , மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 59 போ் தங்கியுள்ளனா்.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி(புதன்கிழமை) இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து முதியோா் இல்லத்தில் இருந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகிய 3 போ் ஜூன் 12 (வியாழக்கிழமை) அன்று உயிரிழந்தனா். இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மதுரையைச் சோ்ந்த தனலட்சுமி (80) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதன் தொடர்ச்சியாக இன்று(ஜூன் 17) முப்பிடாதி(50) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சாம்பவா் வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, காப்பாக உரிமையாளா் ராஜேந்திரனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேர் குணமடைந்து வருவதாகவும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com