கீழடி ஆய்வறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
keezhadi excavation : dmk protest in madurai
திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்X
Published on
Updated on
1 min read

கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தொன்மையின் சிறப்பிடமாக விளங்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com