
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்திக்க சென்னை தலைமைச் செயலகம் வந்த அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவரின் உதவியாளர்கள் உடனடியாக தலைமைச் செயலக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெடித்தது.
அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், பாமக நிறுவனர் ராமதாஸ் பக்கம் இருப்பதாகவும், மற்ற கூட்டங்கள் பற்றி தெரியாது எனவும் முன்னதாக தெரிவித்தார்.
சேலத்தில் நாளை(ஜூன் 19) அன்புமணி தலைமையில் பாமக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பாமக ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கீழடி ஆய்வறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.