
எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 19) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்டரங்கில், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி விழா உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பணிநீட்டிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கலாம். இந்த இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணிநீட்டிப்பு என்பது கிடையாது. கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதில் மருத்துவர்கள் அனுபவம் தேவை என்பதை கருத்தில் கொண்டும், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் இணைந்து கேட்டதற்கு இணங்க, தற்போதைய இயக்குநர் அவர்களுக்கு ஒரு வருடம் பணிநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி யாருக்கும் பணிநீட்டிப்பு என்பது கிடையாது” என்றார்.
இதையும் படிக்க: அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.