
தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்த நாளையொட்டி கண்ணாடி பாட்டிலின் உள்ளே விஜய்யின் ஓவியத்தை வரைந்து ஓவியர் யூஎம்டி ராஜா அசத்தியுள்ளார்.
ஜூன் 22ஆம் தேதி அன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள், நற்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த ஓவியர் யூஎம்டி ராஜா, விஜய்யின் 51-வது பிறந்த நாளையொட்டி கண்ணாடி பாட்டிலின் உள்ளே விஜய்யின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
இந்த ஓவியத்தை வரைய 10 மணி நேரம் எடுத்துக்கொண்ட ஓவியர், தூரிகையை வளைத்து பாட்டிலின் உள்ளே நுழைத்து வண்ணம் தீட்டி, அது காய்ந்த பிறகு மேலும் வண்ணம் தீட்டி விஜய்யின் ஓவியத்தை வரைந்து உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.