
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.
சென்னையில் இருந்து 68 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
உடனே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
பின்னர் அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. சென்னை வந்ததும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானியின் இந்த சாதுர்யமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.