ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

News image

ஏர் இந்தியா விமானம் (கோப்புப் படம்)

Updated On :20 ஜூன் 2025, 4:11 pm IST

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் புணேவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் பொறியியல் குழுவால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன்காரணமாக மீண்டும் தில்லி திரும்பவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

தில்லி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.