ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
டாடா குழுமம் தன் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சி தலைமைப் பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் வில்சன்(55), விமானப் போக்குவரத்துத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர், இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா செய்தது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
வில்சனின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவரின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியை ஏர் இந்தியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொங்கியதில், 241 பேர் பலியாகினர். இந்தத் துயரச் சம்பத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியான கேம்ப்பெல் வில்சன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Campbell Wilson has stepped down as Chief Executive Officer and Managing Director of Air India, PTI reported, quoting a source familiar with the development.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள் கவலை!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

ஏா் இந்தியா சிஇஓ ராஜிநாமா!

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


