நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது பற்றி...

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:21 pm IST

சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் இன்று காலை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து அபுதாபிக்கு இன்று காலை 10.15 மணியளவில் புறப்பட்ட எத்தியாட் விமானம் (இஒய்0343) அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் நுழைவு வாயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விமானத்தில் 228 பயணிகள் உள்பட 238 பேர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், விமானத்தின் இறக்கைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அவசரமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலை மறுத்து எத்தியாட் விமான நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் பிரச்னை ஏற்பட்டது விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டதால் அவசரமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரம் தாமதமாக விமானம் அபுதாபிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Flight Departing from Chennai Makes Emergency Stop! Was It a Fire?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.