பெரியார், அண்ணா பற்றிய விமர்சனம்: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

மதுரையில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி விமர்சனம் செய்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ஏன்? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
trb raja
நெடுவாக்கோட்டையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
Published on
Updated on
2 min read

மதுரையில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி விமர்சனம் செய்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ஏன்? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் நரிகுறவர் சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியது, கீழடி அகழாய்வு பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் கேட்ட கேள்வில் என்ன தவறு இருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் கூறாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவை பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், கட்சியின் கொள்கைப் பிடிப்பை பற்றியும் எல்லோரையும் விட நன்கு அறிவார். சட்டப்பேரவை நிகழ்வுகள் கூட அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் எப்படி உள்ளது என்பதை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். அவர்கள் மனசாட்சிக்கு நாங்கள் கேட்ட கேள்வி உண்மை, சரியான கேள்வி என்பது மிக தெளிவாக தெரியும்.

கீழடியை தமிழர் தொன்மையை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளும்போக்கை பாஜக எடுக்கிறது. அதற்கு அதிமுகவினர் துணை நின்று பார்க்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம். இதற்கு தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டது தவறா?அந்த கேள்விவை மீண்டும் மீண்டும் கேட்போம் அவர்கள் விழித்துக்கொள்ளும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம். நிச்சயமாக விழித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். இல்லையென்றால் அதிமுகவினரே அவர்களை விழிக்க வைப்பார்கள். ஏன் என்றால் இது தமிழர் பிரச்னை, தமிழ்நாட்டிற்கான பிரச்னை, தமிழுக்கான பிரச்னை இதற்கு எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இனி விமர்சித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி கூறியிருக்கிறார். நானும் இதே ஊரில் தான் உள்ளேன் அவரின் எச்சரிக்கையை எதிர்கொள்ள தாயாராக இருக்கிறேன். பாஜக தமிழர் விரோதப் போக்கினை விடாவிட்டால் நிச்சயமாக எங்கது கேள்விகள் தொடரும். அதில் சந்தேகம் ஏதும் வேண்டாம். ஏன் என்றால் கீழடி என்பது நமது தாய் மடி, ஒட்டுமொத்த தமிழர்களின் கலாசாரத்திற்கும் புகழுக்கும் பெருமை சேர்க்கும் மகத்தான இடம். இது பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உணர்பூர்வமாக எடுத்துக்கூறியுள்ளார். அதற்கு ஒரு இழுக்கு வருகிறது என்றால் அதற்கு ஒரு குரல் கொடுக்காத அதிமுகவினர் வேறு எதர்க்காக பொங்கப் போகிறார்கள். என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சியுங்கள் தயவு செய்து தமிழ் மீது கொஞ்சமாவது அக்கரைக்காட்டுகள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

மதுரையில் நடைபெற்றது முருகப் பக்தர்கள் மாநாடு அல்ல அது முழுமையும் பாஜக மாநாடுதான். முருகப் பக்தர்கள் யாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை, பாஜகவினர் காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் தான் அங்கு கூடியிருந்தது. திமுக ஆட்சியில் தான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முயற்சியில் தமிழகம் முழுவதும் 3000 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பாஜகவினரின் இல்லங்களில் முருகனுக்கு இடம் உண்டா? முருகன் படம் கொண்ட பதாகை வைப்பதும் காகித அட்டையில் செய்யப்பட்ட வேல் வைத்துக்கொண்டு நடிப்பதையும மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். நானும் முருகன் பக்தன்தான், ஆண்டுதோறும் திருச்செந்தூர் சென்று முருகனை வழிப்பாட்டுதான் வருகிறேன்.

திமுக ஆட்சியில்தான் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு உரிய நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி கணக்கான சொத்துகளை மீட்டு வரலாற்று சாதனையை செய்துள்ளது. மதுரையில் நடைபெற்ற முருகப்பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் விமர்சித்து பேசியபோது அதில் கலந்துகொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் உள்ளிட்டோர் அதனை கேட்டுக்கொண்டு எப்படி உட்கார முடிந்தது. கீழடி பிரச்னைக்கு பொங்கும் அவர்கள் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு திராவிட தலைவர்களை கொச்சப்படுத்தி பேசியதற்கு பொங்காமல் மௌனமாக இருந்தது ஏன் என்றார்.

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com