கால்நடைகள் விற்பனைக்கு புதிய இணையதளம்! - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் கால்நடைகள் விற்பனைக்கு புதிய இணையதளம் பற்றி..
tn govt
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு கூறியதாக செய்திகள் வந்தன.

சென்னை வேப்பேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கால்நடை கருத்தரங்கு நிகழ்வில் பேசிய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் என். சுப்பையன் இத்தகவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாயைப் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம், பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம், உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்துகொள்ள இயலும். இத்தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்று விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளை தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TN govt has announced that a new website will be created to sell cattle at good prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com