லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது!

சேலத்தில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது..
கிராம நிர்வாக அதிகாரி கைது
கிராம நிர்வாக அதிகாரி கைது
Published on
Updated on
1 min read

சேலத்தில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது காமக்காப்பாளையம்.இந்த ஊரைச் சார்ந்தவர் கண்ணையன் விவசாயி. இவரது நிலத்தை அளப்பதற்காக காமக்காப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பிரபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.

இந்த பணத்தை தர விரும்பாத விவசாயி கண்ணையன் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் இன்று காலை விவசாயி கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இதனை கிராம நிர்வாக அதிகாரி பிரபு மற்றும் உதவியாளர் வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையும் களவுமாக விவசாயிடம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SUMMARY

In Salem, a village administrative officer and a village administrative assistant were arrested for accepting a bribe of Rs. 10,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com