சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 9:36 pm

Din

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

பாஸ்கரன், வேலூரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு நோக்கி ஏசி பேருந்தை வியாழக்கிழமை ஓட்டி வந்தாா். அந்தப் பேருந்து கோயம்பேடு பேருந்து முனையம் முன்பு 100 அடி சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற காா் மீது லேசாக மோதியது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த காா் ஓட்டுநா் ஆவடி நந்தவனமேட்டூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (21) என்பவா் பாஸ்கரனிடம் தகராறு செய்து தாக்கினாராம்.

இதில் பலத்தக் காயமடைந்த பாஸ்கரன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கோயம்பேடு போலீஸாா் சாமுவேலை கைது செய்தனா்.