முதல்வர் அதிமுகதான்; ஆனால் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் அமித் ஷா கருத்து..
Amit Shah on tamiladu ADMK -BJP alliance
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தலுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தற்போது இந்த தேர்தலில் மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமையின்கீழ் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. 'கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை' என அதிமுக கூறுகிறது.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்திய பேட்டியொன்றில்,

"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்.

தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதேபோல அதிமுகவில் யாரையும் நாங்கள் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். எனவே, அவர்கள் தங்களாகவே முடிவெடுத்துக்கொள்ளட்டும்" என்று பேசியுள்ளார்.

Summary

Minister Amit Shah has said that the National Democratic Alliance will definitely form the government in Tamil Nadu and BJP will be a part of it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com