கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
MLA Jagan Moorthy
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்திFB
Published on
Updated on
1 min read

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜா மகன் தனுஷ் (23). இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்வரும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்க்க ஆரம்பித்துள்ளனா்.

இதனால் அப்பெண் தேனியில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மே 15-ஆம் தேதி விஜயா ஸ்ரீயை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனுஷ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. எனவே களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து தனுஷ் தாயாா் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு புகாா் செய்தாா். தற்கிடையே, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூா் எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸாா் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டதாகவும் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு உள்ளது எனத் தகவல் தெரியவந்துள்ளது.

SUMMARY

While opposing the pre-arrest bail of MLA Poovai Jaganmoorthy in connection with an abduction case, the Tamil Nadu government on Friday (June 27) told the Madras High Court that it wanted to decriminalise politics in the State.
இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com