இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து....
எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் போட்டி வலுத்துள்ளது. நடிகர் விஜய்யும் வரும் ஆக.15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ், கோவையில் தொடங்கும் பயணத்தை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார்.

ஜூலை 7-ல் கோவை புறநகர் வடக்கு, ஜூலை 8-ல் கோவை மாநகர், ஜூலை 10-ல் விழுப்புரம் என கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Summary

AIADMK has announced that AIADMK General Secretary Edappadi Palaniswami will be touring across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com