

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேற்றிரவு ஐஐடி வளாகத்தில் நடந்துசென்றபோது மாணவியிடம் கட்டையைக் காட்டி மிரட்டி, அவரின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் வடமாநில இளைஞர்.
வடமாநில இளைஞரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஐஐடி காவலாளிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஐஐடி வளாகத்தில் ஃபுட்கோர்ட்டில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமாரை போலீஸார் கைது செய்தனர்.
வடமாநில இளைஞர் ரோஷன் குமாரை கைது செய்து கோட்டூர்புற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A northern state youth was arrested for sexually harassing a female student on the IIT Chennai campus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.