
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், மாநிலச் செயற்குழுக் கூட்டம் பற்றிய அறிவிப்பை தவெக வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே, கழகச் சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள் / கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள். கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கழகத் தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Vijay's Tamilaga Vettri Kazhagam announced that state executive committee meeting will be held on July 4th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.