
நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா?.
அதானி துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்கள் சிக்கியதை அனைவரும் அறிவோம். போதைப்பொருள்களை பயன்படுத்திய 2 பேரை கைது செய்து விட்டீர்கள். விற்றவர் எங்கே?.
போதைப்பொருள் எங்கிருந்து வருகிறதோ அந்த வேரை வெட்ட வேண்டும்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவையும் கைது செய்து விட்டால் போதைப்பொருள் புழக்கம் நின்று விடுமா?. இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது.
சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Summary
Seeman has stated that actors Srikanth and Krishna are innocent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.