ராமதாஸ் குழந்தையைபோல மாறிவிட்டார்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அன்புமணி கருத்து....
Ramadoss , Anbumani
ராமதாஸ், அன்புமணிIANS
Published on
Updated on
1 min read

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் கலந்தாய்வுக் கூட்டம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஜூன் 28) பனையூரில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

”பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான்; 99 சதவிகிதம் கட்சியினர் நம்மிடம் உள்ளனர். காலையில் இலந்தைப் பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுக்கப்படுகிறது, போடுங்கள் என்றால் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து ராமதாஸின் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார். அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.

தினமும் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன், யாராவது பெற்ற மகனையும் மருமகளையும் பொதுவெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா?” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் 2024-ல் கூட்டணி வைத்தேன்; அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தால், நான் ஏன் மறுக்கப்போகிறேன்.

ராமதாஸ் மீது வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருப்பாரா? இப்போது புகழ்வது ஏன்? செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்?

ஐயா ஐயாவாக(ராமதாஸ்) கடந்த 5 ஆண்டுகளாக இல்லை, 3 பேர் கட்டுப்பாட்டில் உள்ளார்” என்றார்.

Summary

Patali Makkal Katchi leader Anbumani has said that Ramadoss has become like a child due to his advanced age.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com