வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி ...
Valparai constituency declared vacant
சட்டப்பேரவை
Updated on
1 min read

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி காலமானார்.

1980 -ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தாா். மாணவரணி மாவட்டச் செயலா், இளைஞரணி மாவட்டச் செயலா், கவுண்டம்பாளையம் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா்.

கடந்த 2011 முதல் 2021 வரை அன்னூா் பகுதி மாவட்ட கவுன்சிலராகவும், ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். தற்போது எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலராக இருந்து வந்தாா்.

இவரது மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

Summary

Valparai Assembly constituency has been declared vacant following the death of AIADMK MLA Amul Kandasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com