வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Minister Sivasankar
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்X | Sivasankar
Published on
Updated on
1 min read

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே 20.05.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

முதல்வர் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Minister SS Sivasankar says No power tariff hike for Tamil Nadu households, free electricity scheme to continue.

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com