பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதாட்டி மனு

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி தங்கமணி மனு அளித்தார்.
Elderly Woman Thangamani Submits Petition
மூதட்டி தங்கமணி
Published on
Updated on
1 min read

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி தங்கமணி மனு அளித்தார்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற மூதாட்டி. இவர், தன்னிடமுள்ள பழைய ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பழைய நோட்டுகளுடன் வந்து மனு அளித்தார்.

இந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனு அளித்திருக்கிறார். ஆனால் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மூதாட்டி தங்கமணி, தனது மகன் செந்தில்குமார் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்த போது கர்நாடக மாநிலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணம் அடைந்து விட்டார்.

அவரது மரணத்திற்கு பிறகு வீட்டை சுத்தம் செய்தபோது 5 பழைய ஆயிரம் ரூபாய் நோட்டும், 20 பழைய 500 ரூபாய் நோட்டும் இருந்ததைக் கண்டேன். அதனை வங்கியில் மாற்ற முயற்சி செய்தபோது நிராகரித்திட்டனர்.

அதன் பிறகு கோவை மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனு அளித்தும் அதற்கு தற்போது வரை எந்த விதமான தீர்வும் அளிக்கப்படவில்லை. இந்த பணத்தை மாற்றி கொடுத்தால் ஏதாவது பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தப் போவதாக கூறினார்.

Summary

An elderly woman named Thangamani submitted a petition to the Coimbatore District Collector requesting the exchange of old Rs. 1,000 and 500 currency notes.

மதத் திட்டங்களை ஊழலுக்காக சுரண்டுகிறது பாஜக: அகிலேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com