நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025- 26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப். 7-இல் தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும். முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ இணையதளத்திலோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...