மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீட் விண்ணப்பப் பதிவு நிறைவு: நாளைமுதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 8:13 pm

இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெற்றது. மொத்தம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்ததாகக் கூறப்படும் நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

மே 4-இல் தோ்வு: அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.7-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி மாணவா்கள் ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற வலைத்தளம் வழியாக மாா்ச் 9 முதல் 11-ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.

இல்லையெனில் ய்ங்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். தோ்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.