எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!

பாமகவின் நிழல் பட்ஜெட் தொடர்பாக...
பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்.
பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்.
Published on
Updated on
1 min read

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம், படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை என பாமகவின் நிழல் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று(மார்ச் 10) தைலாபுரம் தோட்டத்தில் வெளியிடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிற கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி, அடுத்த 6 மாதங்களில் தீர்வு காணப்படும்.

2. காப்பீடுதாரர்களுக்கு நியாயமான காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்படும்.

3. உழவர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடைக்க வகை செய்ய பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடக்கம்.

4. மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.

5. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.

6. போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் பணிநீக்கப்படுவார்கள்.

7. மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

8. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை.

9. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம். இனி ஒரு சிலிண்டர் ரூ. 318-க்கு கிடைக்கும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கொண்ட பாமகவின் நிழல் பட்ஜெட்டை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com