
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
அதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.
வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.