
மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.
மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், 1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகளை முதல்வர் வழங்கியுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டையின் பயன்களாக, ஏசி பேருந்துகள் தவிர்த்து, நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் 25 கிலோ பொருள்களை 100 கி.மீ. தொலைவுவரையில் எடுத்துச் செல்ல இயலும்; பயிர்க்கடன், கால்நடைக் கடன், சிறுவணிகம், தொழில் முனைவோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்களுக்கு முன்னுரிமை; கோ-ஆப்டெக்ஸில் 5 சதவிகித தள்ளுபடியும், ஆவின் நிலையங்களிலும் தள்ளுபடி; இ-சேவை மையங்களிலும் 10 சதவிகித அளவிலான கட்டணக் குறைவுடனும் பயன்பெறுவர்.
இதையும் படிக்க: 'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.