மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!

வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
Published on
Updated on
1 min read

வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

"வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.

அதன்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன் வழங்கப்படும்.

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ. 275 கோடியில் மாணவியருக்கு 3 விடுதிகள் அமைக்கப்படும். இதில் ஆதிதிராவிடர், சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மகளிர் விடியல் பயணத்திற்கு 3, 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள் விரைவில் பெறப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை அமைக்கப்படும்.

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com