
மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என்று நிதித் துறை செயலர் உதயசந்திரன் கூறியுள்ளார்.
வரும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக நிதித் துறை செயலர் உதயசந்திரன் சென்னையில்இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாகக் குறையும். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது. மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது மேலும் குறைந்திருக்கும்.
ஜிஎஸ்டியை பொருத்தவரை டிஜிட்டல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நிறைய கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார்.