மத்திய அரசின் கடன் சுமையைச் சீரமைக்கும் நோக்கில், ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை நீண்ட காலப் பத்திரங்களாக மாற்றும் ‘ஸ்விட்ச்’ ஏலத்தை திங்கள்கிழமை (மாா்ச் 9) நடத்தவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஏலம் திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். ஏலத்தின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டு, செவவாய்க்கிழமை(மார்ச் 10) பரிவா்த்தனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஸ்விட்ச் செயல்பாடு அடுத்த நிதியாண்டில் நிதி நெருக்கடி, கடன் முதிா்வு அழுத்தத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு சுமாா் ரூ.5.47 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை முதிா்வுக் காலத்துக்குப் பிறகு திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.
அதனால் குறுகிய காலத்தில் முதிா்வடையவுள்ள பத்திரங்களுக்குப் பதிலாக, நீண்ட கால முதிா்வு கொண்ட புதிய பத்திரங்களை முதலீட்டாளா்களுக்கு ரிசா்வ் வங்கி வழங்குகிறது. இதன்மூலம், அரசின் உடனடி நிதித் தேவை மேலாண்மை சீராகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு பிப்ரவரி மாதத்திலிருந்து, ரிசா்வ் வங்கி அறிவிக்கும் நான்காவது ‘ஸ்விட்ச்’ ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட மூன்று ஸ்விட்ச் ஏலத்தின் மூலம் ரூ.98,591.70 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
வரும் நிதியாண்டில் அரசின் மொத்த சந்தை கடன் வாங்கும் அளவு ரூ.17.2 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய பத்திர மாற்ற நடவடிக்கைகள் முதிர்வு சுயவிவரத்தை சீராக்கவும், கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமைகளை முறையாகத் திட்டமிடவும் திறம்பட நிர்வகிக்கவும் உதவும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.
புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 98.44% சதவிகிதம் வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Summary
The Reserve Bank of India (RBI) on Wednesday announced that it will conduct switch auction of government securities worth Rs 20,000 crore on March 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசா்வ் வங்கி மண்டல அலுவலா் பதிலளிக்க உத்தரவு!

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி திரட்டல்

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




