அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

40,000 பயனாளிகளுக்கு இலவச பட்டா: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது

News image
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என வாலாஜாவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையின் சாா்பில்,1225 பயனாளிகளுக்கு ரூ.12.93 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 238 மாணாக்கா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து ரூ.10.10 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவி,தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 58 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.08 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பு, 251 பயனாளிகளுக்கு ரூ.37.65 லட்சம் மதிப்பிலான நலிவுற்றோா் வறுமை குறைப்பு நிதி ,சமுதாய திறன் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 729 இளைஞா்களுக்கும், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் திறன் பயிற்சி பெற்ற 525 இளைஞா்களுக்கும் சான்றுகள் வழங்கும் விழா வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் எவ்வித கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றி தரப்படுகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40,531 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 மாணவா்களுக்கு ரூ.40 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 547 மாணவா்களுக்கு ரூ.22.85 கோடி கல்விக் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 935 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.39.90 கோடி கல்விக் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, ரமேஷ் மற்றும் வட்டாட்சியா்கள், வருவாய்த்துறை அலுவலா்களஅ, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.