சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டுவரப்படுப்படும் என அறிவிப்பு
சென்னையில் காய்கறி தேவை
சென்னையில் காய்கறி தேவை
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வரும் 2025 - 06ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில், சென்னையில் பொதுமக்களுக்கு காய்கறி தேவையை பூர்த்தி செய்ய 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு அமைக்கப்படும்.

மேலும், 9 லட்சம் குடும்பங்களுக்கு 6 காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சிக்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊரகப் பகுதிகளில் காளான் உற்பத்திக்கு மானியம் வழங்கப்படும்.

50 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.

பாரம்பரிய காய்கறி இரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ. 2.4 கோடி ஒதுக்கீடு.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருட்கள் உழவர்களுக்கு விநியோகம்!

மலர் விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.10.5 கோடி ஒதுக்கீடு.

100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com