நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்...

News image
Updated On :15 மார்ச் 2025, 7:25 am

DIN

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பேரவையில் பேசிய அவர்,

"தமிழ்நாட்டில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்திலும், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திலும் மக்கள் எவ்வாறு வேளாண்மை செய்தார்கள் என்று சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இப்பகுதிகளில் மானாவாரிப் பயிர்களான வரகு. தினை, கம்பு போன்றவை பயிரிடப்பட்டதையும், அவற்றை மலை மகளிர் பாதுகாப்பதையும் கண் முன்னே விரிக்கின்றன.

"குருவி ஒப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றவைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும்"

என்ற வரியில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்கள் தினைப்புனங்களில் குருவிகளை ஓட்டியும், கிளிகளை விரட்டியும், பயிரினைக் காத்தும் தொழிலை மேற்கொண்டதை சிலப்பதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

பல்வேறு திட்டங்களில் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்த போதிலும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சுற்றுச்சூழலுக்கும், உயிரியல் பன்மயத்திற்கும் பாதுகாப்பு அளித்துவரும் மலைவாழ் உழவர்களுக்கென சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்த வேண்டியது அவசியம்.

2025-26 ஆம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப்பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட 22 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் திருவண்ணாமலை. நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பத்தூர். திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி. ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.